Kani Maths (www.KaniMaths.com)
Kani Maths (www.KaniMaths.com)
February 26, 2025 at 01:27 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today's (26.02.2025) School Morning Prayer Activities.... திருக்குறள் : பால்: அறத்துப்பால் அதிகாரம் மெய்யுணர்தல் : குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. விளக்கம்: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். பொன்மொழி : 1) கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும். 2) அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும் பழமொழி : Face is the index of the mind அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பொது அறிவு : இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார் ? விடை : ராஜாராம் மோகன்ராய் முக்கியச் செய்திகள் மாநிலச்செய்தி: கோடைக்கு முன்னே வறண்டது மூல வைகை: பாசனம், குடிநீருக்கு சிக்கல் உள்நாட்டுச்செய்தி: 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு.. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை! உலகச்செய்தி: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழப்பு விளையாட்டுச்செய்தி: ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்தார்
🙏 1

Comments