✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 20, 2025 at 11:31 AM
*திருவனந்தபுரம்: ரயில் இன்ஜின் டிரைவர்கள் (லோகோ பைலட்) பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.*
ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. ஆனால், ரத்த பரிசோதனையில் அதுபோன்று ஏதும் தென்படவில்லை. இது பற்றி கேட்டால், ரயில் இன்ஜின் டிரைவர்கள், தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். வாய் புத்துணர்ச்சியூட்டி பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலையில், ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு மேற்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் கோளாறு நிலவும் நிலையில், அதற்கு தீர்வு காணாமல் மாற்றாமல், ரயில் இன்ஜின் டிரைவர்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாடு விதிக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://www.dinamalar.com/amp/news/india-tamil-news/train-engine-drivers-should-not-eat-water-southern-railway/3859381