ஆசிரியர் மனசு திட்டம்
May 15, 2025 at 01:52 AM
*எழுத்தாளராகும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி* அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் குரலைக் கேட்டு தமிழ்நாடே திரும்பிப் பார்த்தது. சொன்னதோடு மட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகளில் SMART CLASS வசதி HighTech Lab வசதி Elite Schools வானவில் மன்றங்கள் வாசிப்பு இயக்கம் கற்பித்தல் தரம் மாணவர் சேர்க்கையில் சாதனை 234 தொகுதிகளிலும் நேரடி கள ஆய்வு 7500 கோடியில் உட்கட்டமைப்பு வசதி நான் முதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம் தமிழ்ப்புதல்வன் திட்டம் இல்லம்தேடிக் கல்வித் திட்டம் 14417 உதவி மையம் என 70 க்கும் மேற்பட்ட திட்டங்களால் இன்றைக்கு ஒட்டுமொத்த தேசத்தையே தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்துறையை திரும்பிப் பார்க்க வைத்த அமைச்சர் *அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பணிக்காலம்தான் , தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்* என தமிழ்நாடு முதலமைச்சரால் பாராட்டப்பட்ட இவர்.. புதிய தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது என்பதை அரசியல் ரீதியாக இல்லாமல் அறிவியல் ரீதியாக அனுபவ ரீதியாக மிகத் தேர்ந்த மற்றும் தெளிந்த பார்வையோடு இருமொழிக்கொள்கையைப் பின்பற்றித்தான் உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியா 29 சதவீதத்தில் இருக்கின்ற சூழலில் தமிழ்நாடு 52 சதவீதத்தில் இருக்கின்றது என்பதையும், *தேசியக் கல்விக்கொள்கை 2020* கல்வியைக் கொண்டு வரவில்லை கலவரங்களைக் கொண்டு வருகின்றது. மனிதத்தை கொண்டு வரவில்லை மதத்தைக் கொண்டு வருகின்றது. சமத்துவத்தைக் கொண்டு வரவில்லை சமூக பேதத்தை முன்னிறுத்துகின்றது என்பதை, ஒரு நூலாக தமிழ் , ஆங்கிலம் என்னும் இரு மொழிகளில் *தேசியக் கல்விக் கொள்கை என்னும் மத யானை* என்னும் பெயரில் கொண்டு வந்திருக்கின்றார். மே -17 ம் தேதி வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமான முறையில் அன்பில் பதிப்பகம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடப்பட இருக்கின்றது.. அமைச்சராக தனது செயல்பாட்டில் வெற்றிகண்டு வரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அமைச்சராக இருந்துகொண்டே உயர்கல்வித்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகவும் இன்னும் கற்றலில் ஆர்வத்துடன் திகழும் இவர் எழுத்தாளராகவும் தனது பயணத்தில் சிகரம் தொட விரும்புகின்றேன்.. சிகரம் சதிஷ்குமார் எழுத்தாளர்- ஆசிரியர்
👍 ❤️ 10

Comments