YOUTH POINT [ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ]
May 26, 2025 at 08:45 AM
*தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்.*
*உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் -மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்.*
*சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார்.*
*இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.*