Let's talk with றாம்
Let's talk with றாம்
May 26, 2025 at 02:28 AM
நேற்று மாலை நடந்த நிகழ்வு குறித்து அன்று இரவே எழுதிவிட்டார் Ramesh Kalyan; ஓசூர் புரவி கூட்டத்தில் பேசிய என் உரை குறித்த அவருடைய குறிப்புகள் இவை: புரவி கூடுகை – 27 (படித்துவிட்டுப் பேசுவோம். படித்ததைப் பேசுவோம்) 23. 05. 2025 நிகழிடம் சப்தகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி நாவல்: தங்க நகைப்பாதை - மு.குலசேகரன் மதிப்புரைத்தோர்: சிவகுமார், சுஜாதா செல்வராஜ், றாம் சந்தோஷ் நெறியாள்கை: பா வெங்கடேசன் (நிகழ்வின், தோராயமான குறிப்புகள்) ----- ----- //றாம் சந்தோஷ்: காலப்பரிமாணம் கொண்டிருக்கும் நாவல் இது. நிலம் கையகப்படுத்துதல் என்பது இல்லாவிட்டாலும் கூட ஒரு விவசாயக் கதை இதில் இருக்கிறது. இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாறி, ஆறு வழியாக விரிந்து, அதுவும் போதாமல் மேம்பாலம் என்று மாறி, இறுதியில் நிலத்தை வாங்கியவனுக்கும் வீடில்லாமல் பறிபோவதை விவசாயக் குடிகள், கூலிகள் வாழ்வின் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறது. இழப்புகளை மட்டுமே பேசும் நாவல். கபடம் நிறைந்த வணிக மாந்தர்கள் பலர் உள்ளனர். ஆனால் விவசாயிக்கு சந்தோஷம் என்பது விளைச்சலைப் பார்ப்பது மட்டுமே. கோவிலின் கருவறை மட்டுமின்று கோபுரம் முதல் தூண்கள் வரை ரசிப்பது போல, நாவலில் ரசிக்க பலவும் உள்ளன. சுந்தரத்தின் பாடுகளும் வீழ்ச்சியும் நாவலில் தெரிகிறது. நாவல் மெல்லத் துவங்கி பயணித்தாலும், ராமன் பாத்திரம் வரும்போதுதான் பிடிமானம் கொள்கிறது. பெண் பாத்திரங்களின் குரல்கள் மிக அரிதாகவே உள்ளன. ஆனால் அவை பேசும் இடங்கள் முழுதும் பொருத்தமுடைய இடங்கள். பொன்னம்மாள் ஒரு கிராமத்து வாழ்வாக மணமுடித்தல் ஒரு பருவமாகவும், தொடர்கதைகள் வாசிக்கும் தங்கை விஜி வளரும் பருவம் ஒன்றாகவும், கல்லூரிப் படிப்புக்கு செல்லும் சுமதி மற்றும் காதல் இன்னொரு பருவமாகவும், கால வளர்ச்சி தென்படுகிறது. கரிய சாலைக்கு கீழ் பல விவசாய நிலங்கள் இருந்தன என்பதை நம்ப முடியாது என்ற வரி அதிர்ச்சியூட்டுகிறது. கிராமத்தில் உயிர்போகும் தருவாயில் உயிரை விடமுடியாமல் இருப்பவருக்கு நிலத்து மண்ணை கரைசலாக புகட்டினால் உயிர் பிரியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த முதியவருக்கு அப்போதும் பிரிவதில்லை. நிலம் விற்ற பணத்தை கையில் தரும்போது பிரிகிறது. நிலத்திலிருந்து ஏதோ ஒன்றை அவன் பெற்றோம் என்றே உயிரை விடுகிறான் என்பது கனமான நிதர்சனமாக உள்ளது.// ----- முழு பதிவினை வாசிக்க: https://www.facebook.com/share/p/1Ady4n6Hqd/?mibextid=oFDknk PC: Rram Santhosh Vadarkkadu
❤️ 1

Comments