
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
May 20, 2025 at 07:47 AM
*NSWF தேசிய சமூகநல அமைப்பு – செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமை பிரிவு
மாணவர் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா மற்றும் செயற்குழு கூட்டம் – 04.05.2025*
நாடளாவிய அளவில் சமூக நலத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் செயல்பட்டு வரும் NSWF தேசிய சமூகநல அமைப்பின் மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட முக்கிய செயற்குழுக் கூட்டம் மற்றும் மாணவர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, கல்வி, கலை மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்கள் பட்டியலாவது:
1. R. தர்ஷினி
இளம் பாடகர், சமூக ஆர்வலர் மற்றும் சிந்தனையாளர்
ஜீ தமிழ் தொலைக்காட்சி 'சரிகமபா' போட்டி பாடகி
விருப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, அமனம்பாக்கத்தை சேர்ந்தவர்
அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்
அவருக்கு “இளம் சமூக ஆர்வலர் மற்றும் சமூக சிந்தனையாளர் விருது” வழங்கப்பட்டது.
2. S. R. திவ்யதர்ஷினி
அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி
தனிப்பட்ட போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதற்காக
அமைப்பின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
3. R. லத்திகா
அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி
2023–24ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம்
அமைப்பின் பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது.
4. R. அஐய்
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி
2023–24 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம்
பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது.
5. S. வைஷ்ணவி
அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி
2023–24 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டாம் இடம்
பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது.
மேலும், ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வாரம் வரை, பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் போன்றவை விநியோகிக்கப்பட்டது, இது அமைப்பின் சமூகப்பணி செயல்பாடுகளில் முக்கிய அங்கமாக அமைந்தது.
இவ்விழாவில் பங்கேற்று அதை சிறப்பித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பாகவும், அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
---தலைவரின் ஆணைக்கிணங்க *NSWF மாவட்டத் தலைவர் டாக்டர் வேலு*