
👫தமிழ்நண்பன் -உலக தமிழர் செய்திகள்
June 4, 2025 at 03:59 AM
*பதிப்பாளர்கள் கூட்டறிக்கை.*
⚫🔴⚫🔴⚫🔴
பொதுநூலக இயக்ககம் கடந்த ஆண்டு அறிவித்த வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தின்படி தற்போது நூலக ஆணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 11,000 நூல்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நிலைத் தேர்வில் 8630 நூல்கள் தேர்வுசெய்யப்பட்டு, விலை தொடர்பாகப் பதிப்பாளர்களுடன் இணையம் வழி நடந்த பரிமாற்றத்திற்குப் பின்னர் 6416 நூல்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆணை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 37 கோடி.
ஊழலும் செல்வாக்கின் ஊடுருவலும் இல்லாமல் நூல்களின் தேர்வு நடைபெற்றுள்ளது. இதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஊழல் கொள்முதல்களால் சீரழிந்த நிலையில் உள்ள நூலகங்கள் மேம்படும், வாசிப்பு செழிக்கும் என நம்புகிறோம்.
புதிய நூலகத் தேர்வுமுறை தொடர்பான பதிப்பாளர்களின் முறைப்பாடுகள் கேட்டறிந்து நீக்கப்படும் என்று நம்புகிறோம்.
இந்தச் சீரிய பணிக்காகப் பொது நூலக இயக்ககத்திற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் எங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
*உமா சரவணன், பாலாறு பதிப்பகம்*
*சரவணபாரதி, தமிழ்நண்பன் பதிப்பகம்*
திரு. முரளிதரன் - ஆதி பதிப்பகம்
திரு. வேடியப்பன் - டிஸ்கவரி புக் பேலஸ்
திரு. அனுஷ் - எதிர் வெளியீடு
திரு. கண்ணன் - காலச்சுவடு பதிப்பகம்
திரு. நல்லு ஆர். லிங்கம் - நாற்கரம் பதிப்பகம்
திரு. இளம்பரிதி - பரிதி பதிப்பகம்
திரு. அருண்.மோ - பேசாமொழி பதிப்பகம்
திரு. உவைஸ் அஹமது - சீர்மை பதிப்பகம்
திரு. செல்வி ராமச்சந்திரன் - உயிர்மை பதிப்பகம்
திரு. கே.வி. சைலஜா - வம்சி பதிப்பகம்
திரு. அருண் - வாசகசாலை பதிப்பகம்
திரு. அம்பிகா குமரன் - வேரல் பதிப்பகம்
திரு. ஜீவ கரிகாலன் - யாவரும் பப்ளிஷர்ஸ்
திரு. ராம்ஜி நரசிம்மன் - ஜீரோ டிகிரி பப்ளிசிங்.
திரு.ஒளிவண்ணன் - எமரால்ட் பதிப்பகம்.
திரு. நல்லினி - எழிலினி பதிப்பகம்
திரு. ஆழி செந்தில்நாதன் - ஆழி பதிப்பகம்.
இந்த வரிசையில் இணைய விரும்பும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது பெயரையும் இணைத்துக் கொள்ளலாம்
#tnpl #tamilnadugovernment #tngovt #tnnews #annacentenarylibrary #தமிழ்நாடு #நூலகம் #பொதுநூலகம் #அண்ணாநூற்றாண்டுநூலகம் #tncm_mkstalin M. K. Stalin Udhayanidhi Stalin Thamizhachi Thangapandian
