TN B.T Teachers Group
TN B.T Teachers Group
June 3, 2025 at 02:04 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's (03.06.2025) School Morning Prayer Activities.. திருக்குறள் / COUPLET : பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter : கல்வி ..Learning : குறள் 392: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. English Couplet 392: The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live. விளக்கம்: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். பொன்மொழி : 1) சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. 2) அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி வர .... பழமொழி : Man proposes God disposes. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும். பொது அறிவு : வரலாற்றின் தந்தை யார் ? விடை : - ஹெரடோடஸ் இன்றைய முக்கியச் செய்திகள் : 03.06.2025 - செவ்வாய். மாநிலச்செய்தி: தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்: மக்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு. உள்நாட்டுச்செய்தி: இந்தியாவில் 4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு. உலகச்செய்தி: “நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. விளையாட்டுச்செய்தி: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 Today's Important News in English:( 03.06.2025 _ Tuesday) State News: Let's work together in Swachh Mission: Tamil Nadu CM appeals to people. National News: Corona cases near 4000 in India: 4 deaths in 24 hours. World News: "Russia should come forward for unconditional ceasefire" - Ukrainian President Zelensky. Sports News: India's world champion D. Kukesh defeated world number one Magnus Carlsen of Norway in the Norwegian chess tournament.
😂 1

Comments