TN B.T Teachers Group
TN B.T Teachers Group
June 5, 2025 at 02:39 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's 05.06.2025 School Morning Prayer Activities... திருக்குறள் / COUPLET : பால்: பொருட்பால் அதிகாரம் / Chapter : கல்வி / Learning : குறள் 394: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். English Couplet 394: You meet with joy, with pleasant thought you part; Blockheads' Such is the learned scholar's wonderous art!. விளக்கம்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். Couplet Explanation: It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again). பொன்மொழி : 1) எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டுமருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,இன்னொன்று மௌனம். 2) அறிவாளிகளுக்கு அறிவு அதிகம்,ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம். பழமொழி : A little string will tie a little bird. சிறு துரும்பும் பல் குத்த உதவும். பொது அறிவு : இயற்பியலின் தந்தை யார் ? விடை : - நியூட்டன் இன்றைய முக்கியச் செய்திகள் : (05.06.2025 - வியாழன்) மாநிலச்செய்தி: 2022-2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது 12 பேருக்கு அறிவிப்பு! உள்நாட்டுச்செய்தி: 2027 மார்ச் 1-ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: மத்திய அரசு. உலகச்செய்தி: நோய் பரப்பும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது. விளையாட்டுச்செய்தி: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 Today's Important News in English: 05.06.2025 - Thursday State News: Tamil Nadu Science Scholar Award for 2022-2023 announced for 12 people! National News: Caste-wise population census to start on March 1, 2027: Central government. World News: Chinese scientists arrested for smuggling dangerous disease-causing fungus to the US. Sports News: Royal Challengers Bangalore team wins the championship title for the first time in IPL history.
😮 1

Comments