TN B.T Teachers Group
TN B.T Teachers Group
June 6, 2025 at 02:43 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்... Today's 06.06.2025 School Morning Prayer Activities... திருக்குறள் / COUPLET : பால் : பொருட்பால் அதிகாரம் / Chapter : கல்வி / Learning : குறள் : 395: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். English Couplet 395: With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place. விளக்கம்: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். Couplet Explanation: The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.. பொன்மொழி : 1) நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம். 2) போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல். பழமொழி : Humility often gains more than pride அடக்கம் ஆயிரம் பொன் தரும். பொது அறிவு : வேதியியலின் தந்தை யார் ? விடை : - இராபர்ட் பாயில் இன்றைய முக்கியச் செய்திகள் : (06.06.2025 - வெள்ளி) மாநிலச்செய்தி: ஜேஇஇ தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். உள்நாட்டுச்செய்தி: உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம்: நாளை திறந்து வைக்கிறார் நம் பாரதப் பிரதமர் அவர்கள். உலகச்செய்தி: “இந்தியா - பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” - ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம். விளையாட்டுச்செய்தி: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி. 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 Today's Important News in English: 06.06.2025 - Friday State News: The Tamil Nadu Chief Minister has said that the government will bear the educational expenses of Rajeshwari, a tribal student who excelled in the JEE exam. National News: The world's highest railway arch bridge: Our Indian Prime Minister will inaugurate it tomorrow. World News: “The one who eased India-Pak tensions is Trump” - Shehbaz Sharif, Bilawal Bhutto praise. Sports News: French Open tennis: Russia's Mirra Andreeva suffers shock defeat.

Comments