The Apostolic Ministries
The Apostolic Ministries
May 24, 2025 at 03:33 PM
30 திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். நீதிமொழிகள் 6 பசிக்கொடுமையால் திருடி சாப்பிட்டால் தவறில்லையாம். ஆனால் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு தண்டனை உண்டு. இளைய குமாரன் நிலையும் கிட்டத்தட்ட இந்த கதி தான். பன்றி தவிட்டை திருடி திண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டான். காரணம் தகப்பன் வீடு ஆலோசனைகள், கண்டிப்பு பிடிக்கல. இதற்கு எதிராக நண்பர்கள் பழக்க வழக்கங்கள், அவர்கள் வழி தான் இப்படிப்பட்டவர்களுக்கு இன்பமாக இருக்கிறது. கடைசியாக துன்பமாக முடியும் என்பது வேறு கதை. இளையக் குமாரன் தகப்பன் வீட்டில் வேலைக்காரரே திருப்தியாக உண்டனர். இவனோ திருடி திண்கிற நிலைமையில் இருந்தான். இன்றைக்கு தகப்பன் வீடு என்கிற ஜெப வீட்டில், கர்த்தருடைய வீட்டில், தேவனுடைய வீட்டில் திருப்தியான ஆவிக்குரிய மன்னா, ஆத்துமாவிற்கு போதுமான அளவிற்கு இருக்கிறது. ஆனால் சில இளையக் குமாரர்களுக்கு கர்த்தருடைய வீட்டில் தேவ ஊழியர்கள், தேவ சமூகத்தில், ஜெபத்தில், வேத தியானத்தில் தயாரிக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியமான, வீட்டு சாப்பாடு பிடிக்காமல், இளையக்குமாரனை போல தகப்பன் வீட்டை விட்டு மார்கந்தப்பி அலைந்து, உணவு இல்லாமல், பஞ்சத்தில், பட்டினியில் வாழ்கிறார்கள். பசிக்கொடுமை தாங்க முடியாமல் ஆத்தும வறட்சியிலும், தாகத்தாலும், பசியாலும், இளையக் குமாரனை போல அலைகிறார்கள். கடைசியாக ஆத்தும பசியை தீர்க்க ஆராதனை வீரர்கள் அல்லது தீர்க்கதரிகள் சபைக்கு வெளியே நடக்கும் கூட்டங்களை தேடி ஓடுகிறார்கள். இன்னும் யூடியுப்ல, ஷேர் சாட்ல அல்லது வாட்சப், முகநூலில் சுவிசேஷர்கள், அல்லது பிற சபைகளின் விளம்பரத்துக்காக போடும் வசனங்களை தேடி, கண்டுபிடித்து தங்கள் பசியை தற்காலிகமாக ஆற்றிக் கொள்கிறார்கள். வீட்டில் சாப்பிட்டால் சொந்த சாப்பாடு உரிமையோடு அப்பா போடுற சாப்பாடு. பக்கத்து வீட்டில் சாப்பிட்டால் ஓசி சாப்பாடு. ஹோட்டலில் சாப்பிட்டால் காசு கொடுத்து உண்ணும் சாப்பாடு. திருடி சாப்பிட்டால் திருட்டு சாப்பாடு. தகப்பன் வீட்டில் திருப்தியான சாப்பாடு உண்டு. இது இளைய குமாரன் புத்திக் கெட்டு அலைந்த போது தெரியல, புத்தி தெளிந்த போது தான் இது புரிந்தது. மரியாள் போல இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து வசனத்தை புசி பசி தீர. இளைய குமாரனைபோல அங்குமிங்கும் அலையாதே குறைவும், வெறுமையும், அதிருப்தியும் தான் மிஞ்சும். தகப்பன் வீட்டை விரும்பு மனந்திரும்பு. உன்னிலிருந்து ஆசிர்வாதங்கள் வழிந்தோடும். நீ அநேகரை போசிக்கும் தகப்பனாக மாறுவாய்‌.

Comments