Kalvisolai | கல்விச்சோலை
June 14, 2025 at 09:22 AM
*நீட் தேர்வு ரிசல்ட் 2025 முதலிடம் பிடித்த மாணவன் யார்?*
NEET exam result 2025
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 22.09 லட்சம் பேர் எழுதினர். தற்போது மாணவர்களின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதில் 12,36,531 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி விடைக்குறிப்புகள் வெளியான நிலையில், முடிவுகள், தரவரிசை பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சம் கட்-ஆப் 127 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 133 ஆக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 99.9999547 என்ற மதிப்பெண்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவன் மகேஷ்குமார் முதலிடம் பிடித்தார்.
அகில இந்தியா அளவில் தமிழகம் 27வது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் எஸ் சூர்யா மாணவன் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை அபினீத் நாகராஜ் என்ற மாணவரும், ஜி எஸ் புகழேந்தி மாணவன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.