ƤѲᝬ Cɪɴᴇᴍᴀ ᴡᴏʀʟᴅ
ƤѲᝬ Cɪɴᴇᴍᴀ ᴡᴏʀʟᴅ
June 14, 2025 at 05:17 AM
*இன்றைய தலைப்புச் செய்திகள்* 📰 🗞️ ஒன்றிய அரசு கீழடி வரலாற்றை அழிக்கத் துடிப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு;சரஸ்வதி நாகரிகத்திற்கு ஆதாரம் கேட்காதவர்கள், தமிழ்த் தொன்மையை மட்டும் நிராகரிப்பதாகக் காட்டம்! 🗞️ குஜராத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 265-ஆக அதிகரிப்பு; மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 🗞️ விபத்தில் சிக்கிய விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் மீட்பு; விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தொடங்கினர்! 🗞️ நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார்! 🗞️ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிப்பாதையில் தென்னாப்பிரிக்கா;ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் ஐசிசி பட்டம் வெல்லும் என எதிர்பார்ப்பு!
❤️ 😮 👍 5

Comments