
Sun News
June 18, 2025 at 01:12 AM
*இன்றைய தலைப்புச் செய்திகள் | 18.06.2025*
🗞️ சென்னையில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்-கள் இன்று திறப்பு. மெரினாவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
🗞️ கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை. ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
🗞️ இஸ்ரேலில் உளவு அமைப்பான மொசாட்டின் முக்கிய அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல். ஈரானின் ராணுவ கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்.
🗞️ பாமக, தேமுதிக கட்சிகளைக் கூட்டணிக்கு வரவழைக்கவே கூட்டணி ஆட்சி என பாஜக பேசி வருவதாக திருமாவளவன் விமர்சனம்.
🗞️ கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை என பாமக தலைவர் அன்புமணி குமுறல். காலம் வரும்போது பிரச்சினைகள் சரியாகிவிடும் என்றும் நம்பிக்கை.
👍
😂
❤️
🙏
😮
🤣
❤
😢
🇮🇳
🤔
101