Sun News
June 20, 2025 at 12:53 AM
*🚨 டாப் நியூஸோடு இன்றைய நாளை தொடங்குங்க மக்களே..!*
📰 சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படும்.. கத்திப்பாரா பகுதி பணிகளை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
📰 கபினி அணையில் இருந்து தொடர்ந்து 25,000 கன அடி நீர் வெளியேற்றம்.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு
📰 சீன அச்சுறுத்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்.. எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்து செல்ல முடியவில்லை எனக் குற்றச்சாட்டு
📰 இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.. சுப்மன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
📰 கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டு சிறை தண்டனை.. புதிய மசோதாவை கொண்டு வர கர்நாடக அரசு முடிவு
📰 அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானம் குறித்து ஏர் இந்தியா விளக்கம்.. புறப்படும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அறிக்கை
📰 இண்டிகோ விமானம் அவசரமாக பெங்களூருவில் தரையிறக்கம்.. கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த போது எரிபொருள் தீர்ந்ததால் நடவடிக்கை
📰 இஸ்ரேல்-ஈரான் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என புதின், ஜி-ஜிங்பின் கண்டனம்.. அமெரிக்கா தலையிடுவது ஆபத்தானது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
📰 இன்று திரைக்கு வரும் குபேரா, DNA உள்ளிட்ட 5 திரைப்படங்கள்.. நடிகர் அமிர்கானின் `சித்தாரே ஸமீன் பர்', தனுஷின் ‘குபேரா’ படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
👍
❤️
🇮🇷
🏆
🙏
❤
🇮🇳
🍬
🇮🇱
🇵🇰
43