Legal Lions
June 1, 2025 at 02:33 PM
*தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முக்கிய பிரிவுகள்.!* *சட்டம் அறிவோம்! மக்கள் அதிகாரத்தை பயன்படுத்துவோம்!* *(1) உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)* *(2)- பிரிவு 4(1) Dன்படி தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.* *(3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு என்கிற காரணங்கள் கேட்க கூடாது.* *(4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.* *(5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.* *(6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.* *(7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால் உங்கள் தகவல் மறுக்கப்படுவதாக அர்த்தம் பிரிவு 7(8)ன்படி மறுப்பதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.* *(8)- பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் கட்டணமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.* *(9)- பிரிவு 7(9)ன்படி நீங்கள் கேட்டுள்ளபடி தகவலும் அதுபோல அளிக்கப்பட வேண்டும்.* *உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும் ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால் உரிய காரணத்தை சொல்லி தர இவ்வாறு இயலாது இவ்வாறு தரலாம் என கூற வேண்டும்.* *(10)- பிரிவு 8(1)ன்படி நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் மறுக்க முடியாத தகவல்களை அளிக்க வேண்டும்.* *(11)- பிரிவு 19(8) B ன்படி தகவல் முழுமையாக வழங்கப்படாததால் இழப்பீட்டை கோரலாம். இந்த இழப்பீடு கொடுக்க தகவல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.* *(12)- பிரிவு 20(2)ன்படி பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்கள் பெற மறுத்தாலோ அல்லது தகவல் அளிக்க மறுத்தாலோ தகவல் ஆணையம் பொது தகவல் அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும்.* *(13)- பிரிவு 20(1)ன்படி தகவல் வழங்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 முதல் ரூபாய் 25000 வரை தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்க முடியும்.* *(14)- பிரிவு 3 ன்படி அனைத்து குடிமக்களும் தகவல்களை கேட்கலாம் அமைப்புகளின் சார்பிலும் கேட்க முடியும்.* *(15)- பிரிவு 19(1)ன்படி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் வராமல் இருந்தாலோ (அ)30 நாட்களுக்குள் பதில் வந்தும் மேல்முறையீடு செய்ய உரிய காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ பிரிவு 19(5)ன்படி மேல்முறையீடு காலதாமதமாக செய்தாலும் ஏற்க வேண்டும்.* *(16)- பிரிவு 19(3)ன்படி மேல்முறையீடு அதிகாரியிடமிருந்து திருப்தியற்ற பதில் வந்தாலோ அல்லது பதில் வராமல் போனாலோ 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.* *(17)- பிரிவு 5 ன்படி பொது தகவல் அலுவலரின் பதவி பெயரை கேட்கலாம்.* *(18)- பிரிவு 27 ன்படி விதிகளை இயற்றிட உரிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.* *(19)- பிரிவு 21 ன்படி நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.* *(20)- பிரிவு 13 ன்படி பதவி பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகளை குறிக்கிறது.*
👍 9

Comments