Legal Lions
June 17, 2025 at 03:02 AM
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் சரமாரி கேள்விகள்
கட்ட பஞ்சாயத்து செய்ய தான் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா?
58 வயது ஆன உங்களை காவல்துறை தினமும் கண்காணித்து கொண்டிருக்குமா?
தவறு செய்யவில்லை என்றால் எதற்காக இரண்டாயிரம் பேரை சேர்த்து காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள்?
உங்கள் கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் இல்லாத போது எதற்காக கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு பேர் கூடினார்கள்?
கட்சி தலைவரான நீங்களே காவல் விசாரணையை தடுப்பீர்களா?
எம்எல்ஏவான நீங்கள் எதற்கு போலீஸ் விசாரணைக்கு செல்ல பயப்பட வேண்டும்?
கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பது தான் உங்கள் பாலிசி என்றால் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்.
200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்.
நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்.
விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை.
❤️
👍
4