BABASAHEB
BABASAHEB
May 27, 2025 at 04:45 AM
*தியாகத்தின் அடையாளம் அன்னை ரமாபாய் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று! அன்னையின் நினைவை போற்றுவோம்!* *எனது கடைசி நாட்களில், பாபாசாகேப் என்னுடன் மிகவும் அக்கறையுடன் இருந்தார். 39 வயதில் என் வாழ்க்கை முடிவடையும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். பாபாசாகேப்பின் வாழ்நாள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் நான் எப்போதும் அவருக்கு துணையாகவும் ஒத்துழைப்புடனும் இருந்ததால் முழு திருப்தியுடன் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன் என்பதை உணர்ந்தேன். "பீம் ராவ் அம்பேத்கர்" என்பதிலிருந்து "பாபாசாகேப்" என்று மக்கள் கொண்டாடும் பரிணாம வளர்ச்சியில் நான் முக்கியப் பங்காற்றினேன் என்பதை நான் எப்போதும் பெருமையாக கருதுகிறேன். அதே போல பாபாசாகேப்பின் தொண்டர்கள் இப்போது என்னை ரமாபாயிலிருந்து "அன்னை ரமாபாய்" என்று அழைப்பதை என் வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எனது இந்த பெருமை மற்றும் மகத்தான வாழ்க்கை என்பது அவருடைய மனைவியாக பாபாசாகேப் எனக்களித்த பரிசு.* *என் குழந்தைகளைப் பற்றிய பல எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன. அவர்கள் இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்து உருகும் மெழுகுவர்த்திகளாக மாறினர். தற்போது என் மனதிற்கு மிகுந்த திருப்தியைக் கொடுக்கும் வகையில் பெரிய மெழுகுவர்த்தியாக மாற என் குழந்தைகளுடன் நானும் இணைகிறேன். இப்போது அந்த ஒளி ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு தெருவுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் முழு நாட்டிற்கும் அப்பால் ஒளி கொடுக்கத் தொடங்கியது. இப்போது நம் நாடு அதில் பிரகாசிக்கிறது; ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது; அந்த ஒளியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.* -- அன்னை ரமாபாய் அம்பேத்கர் (07.02.1898 - 26.05.1935) *கடுமையான சமூக சவால்கள் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்ட போதிலும், அன்னை ரமாபாய் அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சமூக பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அன்னை ரமாபாய் அவர்கள் மன உறுதி, தைரியம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக திகழ்கிறார். அன்னைக்கு நம் புகழ் வணக்கம். ஜெய் பீம்!* Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n *Today is the remembrance day of Mother Ramabai Ambedkar, a symbol of sacrifice! Let us honor her memory!* *“In my final days, Babasaheb cared for me deeply. At the age of 39, I realized that my life was coming to an end. I left this world with complete satisfaction because I had always stood by Babasaheb in all his lifelong struggles and movements with full support and cooperation. I have always felt proud to have played a significant role in the evolution from ‘Bhimrao Ambedkar’ to the beloved ‘Babasaheb’ as people fondly called him. Similarly, I consider it the greatest blessing of my life that Babasaheb’s followers now refer to me not just as Ramabai, but as ‘Mata Ramabai’.* *Many thoughts about my children arise in my mind. They sacrificed their lives like melting candles to bring light into the lives of the oppressed people of this country. Now, I too join my children as one more large candle that brings immense satisfaction to my heart. That light has now started to shine into every home, every street, across all states, and beyond the entire nation. Today, our country is glowing with that light; a new chapter has begun; and no power can stop that light.”* — *Mata Ramabai Ambedkar (07.02.1898 – 26.05.1935)* *Despite facing severe social challenges and dire economic conditions, Mata Ramabai stood as a strong pillar of support to Dr. Babasaheb Ambedkar’s social missions. She remains a symbol of strength, courage, and sacrifice. Salutations and tributes to Mata Ramabai. Jai Bhim!* -- A K.Dhanakumar Dr.Ambedkar Intellectual Society, Chennai.
🙏 👍 ❤️ 🔥 🤣 14

Comments