NTK IT WING
NTK IT WING
June 19, 2025 at 08:56 AM
திருச்செந்தூரில் தமிழில் குட முழுக்கா ? அல்லது தமிழுக்கு முழுக்கா ? திருச்செந்தூர் முருகன் கோயிலின் நிர்வாகம் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பை முன்னிறுத்தி எல்லா காட்சி ஊடகங்களும் "தமிழில் குடமுழுக்கு" என்று செய்திகளை பரப்பியது. அதனை தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து, அந்த துறைசார்ந்த அமைச்சர் சேகர் பாபு "தமிழிலும் குடமுழுக்கு" என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். வந்த அறிவிப்பும், அதனை தொடர்ந்து வந்த செய்திகளும் முழுமையாக மக்களை ஏமாற்றி, நீண்ட காலமாக இந்த கோரிக்கையை வைத்து போராடுபவர்களை அவமதிப்பதாகும் இருக்கிறது. அறிவிப்பில் "தமிழில் வேத மந்திரம் ஓதப்படும்" என்று சொல்பவர்களுக்கு, வேதம் என்பது தமிழில் இல்லை என்பதும், தமிழ் இறைப் பாடல்கள் எதுவும் வேதமில்லை என்பது புரியாமல் போனது எப்படி ? நிகழ்ச்சியின் தோராய அறிவிப்புகள் அடிப்படையில், அதிகாலை 6.30 மணியளவில் குடமுழுக்கு முடிந்துவிடும் என்ற நிலையில், 7 மணிக்கு மேல் பாடப்படும் பாடல் குடமுழுக்கு நிகழ்வின் பாடலா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. மேலும் குடமுழுக்கு நிகழ்வு என்பது யாகசாலை, கருவறை மந்திரம் மற்றும் கலசத்தில் நீர் ஊற்றும் போது பாடப்படும் மந்திரம் என்று மூன்று முக்கிய நிகழ்வுகளைக் கொண்டது. இந்த நிகழ்வுகளில், தமிழ் எங்கெங்கு பயன்படுத்த பட இருக்கிறது ? என்றும், அதன் விகிதாச்சார கால அளவு குறித்தும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நம்மை ஏமாற்றும் விதமாக மீண்டும் ஒரு பொய்யை சேகர்பாபு வழிகாட்டல் படி சொல்லி இருக்கிறது கோயில் நிர்வாகம். இந்த அடாவடி போக்கை வன்மையாக கண்டிக்கிறது வீரத்தமிழர் முன்னணி. தமிழே இறைமொழி என்று கொண்டாடும் நிலையில், இறையை போற்றும் முக்கிய நிகழ்வுகளில் தமிழை புறக்கணித்து விட்டு, பக்கவாத்திய நிகழ்வுகளில் சேர்க்கிறோம் என்று பேசுவதெல்லாம் மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. யாகசாலை, கருவறை மற்றும் கலச வழிபாடு நிகழ்வுகளுக்கு தமிழுக்கு கொடுக்கப்படும் இடமும், கால அளவும் என்ன ? என்பதை வெளிப்படையாக அறிவிக்கா விட்டால், மிகப்பெரிய போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்பதோடு, மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் இந்துசமய அறநிலைய துறைக்கும், அமைச்சகத்துக்கும் வன்மையான கண்டனங்களை வீரத்தமிழர் முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. ஜூலை 7 திருச்செந்தூரில் ஒன்று கூடுவோம் வீரத்தமிழர் முன்னணி தமிழர் நாடு 19-06-2025
Image from NTK IT WING: திருச்செந்தூரில் தமிழில் குட முழுக்கா ?  அல்லது தமிழுக்கு முழுக்கா ?  ...
🙏 👍 ❤️ 6

Comments