NTK IT WING
NTK IT WING
June 19, 2025 at 01:50 PM
இராமநாதபுரம் தொகுதி, சித்தூரில் நியாய விலை கடை மோசடி – நாம் தமிழர் கட்சி உறவுகளின் துரித முயற்சியில் தடுத்து நிறுத்தம் ! இராமநாதபுரம் தொகுதியின் சித்தூர் ஊராட்சியில் இன்று காலை, நியாய விலை கடையில் சில அரசி மூட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு தானியில் (ஆட்டோ) ஏற்றப்பட்டது. இதை கண்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் காரணம் கேட்க, "பழைய அரசி மூட்டைகளை மாற்றுகிறோம்" என ஊழியர்கள் பதிலளித்தனர். பழைய அரிசி மூட்டைகளை வெளியே எடுத்துச் செல்ல உத்தரவு ஆவணம் (order copy) கோரிய கட்சி உறவுகள், அது வழங்கப்படாததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின் மோசடி உறுதி செய்யப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அரசி மூட்டைகளை எடுத்துச் செல்ல இருந்த தானியும் (ஆட்டோ) கைப்பற்றப்பட்டது . நம் உரிமைகளுக்காக நெஞ்சுடன் குரல் கொடுத்த நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள். நாம் தமிழர் 💪 https://x.com/_ITWingNTK/status/1935696242560131384?t=UWawJTn4v4rY_OLHX5ORog&s=19
👍 🙏 ❤️ 8

Comments