நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official

8.2K subscribers

About நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம். கட்சி நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள், செய்திகள், புகைப்படங்கள், காணொலிகள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிக்கைகள், புகைப்படங்கள், செய்திகள், நேர்காணல்கள், செய்தியாளர் சந்திப்பு, எழுச்சியுரைகளின் காணொலிகள் அனைத்தையும் உடனுக்குடன் பெற தொடர்ந்து இணைந்து இருங்கள். join.naamtamilar.org / 044-43804084 / 909-252-9250

Similar Channels

Swipe to see more

Posts

நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/24/2025, 4:19:55 PM

https://youtu.be/X26S3rBpILg

👍 ❤️ 👏 8
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/24/2025, 6:01:29 AM

https://youtu.be/dbEk_oPStoU

❤️ 🙏 5
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/25/2025, 4:18:33 AM
Post image
👍 5
Image
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/25/2025, 4:18:15 AM

அறிக்கை: *திருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கோவில் நகராம் - திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலை அழித்து, அங்கு 1000 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் ஒன்பது ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டத்திற்காக உருவாக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திமுக அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? நெருக்கடி மிகுந்த சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன. அதனையும் அழித்து முடிக்க திமுக அரசு துடிப்பது ஏன்? திமுக ஆட்சியில் புதிதாக விளையாட்டு திடல்கள்தான் உருவாக்கப்படவில்லை; ஏற்கனவே இருக்கும் விளையாட்டு திடல்களையும் அழிப்பதென்பது முறைதானா? விளையாட்டுத் திடல்களை எல்லாம் வேறு பணிகளுக்காக அழித்துவிட்டு விளையாட்டு வீரர்களுக்கு எங்கே சென்று பயிற்சி அளிக்கப் போகிறீர்கள்? இதுதான் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு வளர்க்கும் முறையா? தினமும் பல நூறு பிள்ளைகள் பயற்சி பெறும் விளையாட்டுத்திடலை அழிக்கும் அரசின் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது அவருடைய அனுமதியோடுதான் விளையாட்டுத் திடல் அழிக்கப்படுகிறதா? அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த தம்பி உதயநிதி, அவர் பெயரில் உள்ள திடலை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? அதுமட்டுமின்றி, கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடல் அருகே, நீர்நிலை, பள்ளிக்கூடம், புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சிவன் கோயில், தேவாலயம், மக்கள் குடியிருப்புகள் ஆகியவை உள்ள நிலையில் நிலத்தையும் - நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடுவிளைவிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அங்கே அமைப்பது ஏன்? அரசுக்கு சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? என்ற பொதுமக்களின கேள்விகளுக்கு திமுக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். மாறாக, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீது காவல்துறையை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்து சிறையிலடைப்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, மக்கள் பயன்பாட்டில் இல்லாத வேறு இடத்திற்கு அதனை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலை பாதுகாக்க மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இவ்வறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். https://x.com/Seeman4TN/status/1926492130580525229?t=bJ_TV4xdn4ciEB2AtRul5Q&s=19 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

👍 4
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/24/2025, 3:59:02 AM
Post image
❤️ 👍 5
Image
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/25/2025, 4:18:32 AM
Post image
👍 ❤️ 3
Image
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/25/2025, 7:19:17 AM

அறிக்கை: *வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் குப்பை கொட்டும் இடமாக உருமாற்றப்பட்ட வடசென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், ஏற்கனவே உள்ள குப்பைகளை அகழ்ந்தெடுத்துவிட்டு, புதிதாக சேரும் குப்பைகளை அகற்ற 75 ஏக்கர் பரப்பளவில் 1600 கோடி செலவில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு திட்டமிட்டமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் மலை மலையாக குவிக்கப்பட்டு கொடும் நோய்த்தொற்றுக்களை உருவாக்கும் குப்பைக் கிடங்கினை அகற்றக்கோரி கொடுங்கையூர் மக்கள் கடந்த 30 ஆண்டிற்கும் மேலாக தொடர்ப் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போதுதான் அக்குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி 640 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒருவழியாக குப்பைகள் அகற்றப்படுவதை எண்ணி வடசென்னை மக்கள் தற்போதுதான் நிம்மதியடைந்த நிலையில், அதனைக் கெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய குப்பைகள் எரி உலை திட்டத்தை செயல்படுத்த முனைவதால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திமுக அரசின் இத்திட்டம் எளிய மக்கள் வாழும் பகுதியான கொடுங்கையூரில் மீண்டும் குப்பைகள் கொட்டுவதை ஊக்குவிப்பதாக ஆகிவிடும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அப்பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்காக எரி உலையில் எரிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகளால் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை உடைய காற்றுகள் வெளிப்பட்டு கொடும் நோய்களை உருவாக்கவும் காரணமாக அமையும். எனவே திமுக அரசு நடைமுறைப்படுத்த முனையும் எரி உலை திட்டம் என்பது ஒரு தீங்கிற்கு மாற்றாக மற்றொரு தீங்கை அனுமதிப்பது போன்றதாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குப்பை எரி உலை திட்டம் முற்றாக தோல்வியடையந்து அம்மாநில அரசுகளால் கைவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது கொடுங்கையூரில் எரி உலை அமைக்க ஒப்பந்தம் பெறப்பட்டுள்ள தனியார் நிறுவமான எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் நிறுவனமானது, ஏற்கனவே ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி வரும் சஸ்டெய்னபிள் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சஸ்டெய்னபிள் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை செய்யும் இடங்களில் குப்பைகளை முறையாகக் கையாளாமல் தூய்மையற்றதாகவும், பல்வேறு நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை நாசமாக்குவதாகவும் அம்மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள 18 ஏரிகள் நாசமாகிவிட்ட நிலையில், அதன் துணை நிறுவனத்தை வடசென்னைக்கு அழைத்து வந்து கொடுங்கையூரில் குப்பைகளை பாதுகாப்பாக எரிக்கப்போவதாக கூறுவது பேராபத்தானதாகும். ஏற்கனவே, வடசென்னையிலுள்ள மணலி சின்ன மாத்தூரில் ஒவ்வொரு நாளும் 10 டன் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் நச்சுப்புகையே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெளியாகி அதனால் மக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதைவிட பன்மடங்கு அதிகமாக 1400 டன் அளவிற்கு குப்பைகளை தினமும் எரித்தால் வடசென்னையே சுற்றுச்சூழல் பேரழிவினை எதிர்கொள்ள நேரிடும். குப்பை எரிஉலை திட்டம் பாதுகாப்பானது என்றால் அதனை சென்னையின் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் செயல்படுத்தலாமே? குப்பை மேடென்றால் ஏன் எப்பொழுதும் 20 லட்சம் எளிய மக்கள் வாழும் வடசென்னை பகுதியிலேயே செயல்படுத்த முனைகிறீர்கள்? எரி உலை திட்டம் செயல்படுத்தும்போது ஒவ்வொரு நாளும் உருவாகும் நச்சுக்காற்றினை கட்டுப்படுத்த என்ன திட்டம் உள்ளது? அதில் தினமும் உருவாகும் 500 டன் நச்சுச்சாம்பலை எங்கே கொண்டு போய் கொட்டூவீர்கள? வருடத்திற்கு ஒரு நாள் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் கரிப்புகையை கட்டுப்படுத்தவே, சென்னை மாநகரில் நூற்றுக்கணக்கான விதிமுறைகளை உருவாக்கி, காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் நெருக்கமாக வாழும் வடசென்னையில் ஒவ்வொரு நாளும் 1400 டன் குப்பைகள் எரிப்பதை எப்படி அனுமதிக்கிறது? வடசென்னையில் வாழ்பவர்கள் மக்கள் இல்லையா? அல்லது அவர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா? என்ற கேள்விகளுக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் பதிலென்ன? ஆகவே, நிலத்தையும், நீரையும், காற்றையும் நாசமாக்கி, மண்ணின் வளத்தையும் மக்கள் நலத்தையும் சீர்கெடுத்து, சுற்றுச்சூழலை முற்றுமுழுதாக அழித்தொழிக்கும் கொடுங்கையூர் புதிய எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். திமுக அரசின் கொடுங்கையூர் புதிய குப்பை எரி உலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று 25.05.2025 முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, மக்கள் நல கோரிக்கைகள் வெல்லும் வரை தோள் கொடுத்து துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். https://x.com/Seeman4TN/status/1926519959280136522 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

👍 😞 2
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/25/2025, 6:46:40 AM

👍 3
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/24/2025, 3:59:08 AM
Post image
👍 ❤️ 👏 😮 13
Image
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
5/24/2025, 3:53:28 AM

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெரும்புகழ் போற்றுவோம்! "உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..! அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..! ‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..! ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..! இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..! தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..! கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..! பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஓரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து, சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..! காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..! நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்! தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்! நாம் தமிழர்! https://x.com/Seeman4TN/status/1926088979968844137?t=uQ8uMMktIGaORy-3xWeBWw&s=19 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

❤️ 👍 🙏 8
Link copied to clipboard!