RTI வழி காட்டி குழு
549 subscribers
About RTI வழி காட்டி குழு
மேலும் தகவலுக்கு எங்களுடன் இணைந்து இருங்கள் தகவல் சட்டம் முகநூல் குரூப் லிங்க் கிளிக் செய்யவும்* 👇👇👇👇 https://m.facebook.com/groups/1335593024043265/?ref=share&mibextid=NSMWBT
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                நம்முடைய கோரிக்கை - Cmcell -மனு👇 அனைவருக்கும் நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தலையணை மலைவாழ் பழங்குடியினர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தங்கள் வீடுகளை பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை. அந்த கோரிக்கையை நாம் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு பதிவு செய்து மேலும் அந்த கோரிக்கைகளை ஊடகம்,செய்தி தாள் நண்பர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று செய்திகள் பதிவு செய்தோம் . அதன் நடவடிக்கையாக ஒரே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. 15- வீடுகளுக்கு (ஒரு வீட்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்)15-இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 👍👍👍👍👍👍👍👍 தனி ஒருவன் சுரேஷ் சமூக செயற்பாட்டாளர் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம்.
                                    
                                *தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு - 2025* *ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு* தகவல் பெறும் உரிமைச் சட்ட இயற்றி 20 ம் ஆண்டினை கொண்டாடவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பல நல்ல, நேர்மையான மக்கள் பணியை முன்னெடுத்த ஆயிரக்கணக்கான RTI ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களின் சங்கமம் *தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு 2025* என்ற தலைப்பில் மதுரை நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க *தமுக்க மைதானத்தில்* வரும் *10/08/2025 ஞாயிறு* காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் 1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி வரும் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் மகத்தான *20 தீர்மானங்களை* நிறைவேற்றுவது. 2. இந்திய தேசத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் *5000 தகவல் பெறும் உரிமைச் சட்ட மனு* எழுதி *தேசிய சாதனை* புரிவது. 3. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த *தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களுக்கு விருது* வழங்குதல். நடைபெற உள்ளது இந்நிகழ்வுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் வேண்டும் என போராடிய *தோழர் அருணா ராய்* அவர்களும், இந்திய பாராளுமன்றத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தாக்கல் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் *RTI சேர்மன் Dr E.M. சுதர்சன நாச்சியப்பன்* அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். சாதி, மதம், கட்சிகள் மாநாடு நடத்திடும் *சட்டத்தின் ஆட்சி* நடக்கும் நாட்டில் சட்டத்திற்காக நடத்தப்படும் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள இன்றே பதிவு செய்வோம். https://forms.gle/AGCEGdZZx3tCFJBh9