Daily Thanthi
February 15, 2025 at 12:18 PM
இந்தியாவை சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் 104 பேரை கடந்த 5-ஆம் தேதி அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
இந்நிலையில் மேலும் 119 இந்தியர்களுடன் 2-ஆவது விமானம் இன்று இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வர உள்ளது. இதில் உள்ள 100 பேர் பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 157 இந்தியர்கள் 3-ஆவது விமானத்தில் நாளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
👍
😢
5