Daily One Missionary Biography
Daily One Missionary Biography
January 26, 2025 at 12:20 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *ஜனவரி 26* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *மார்க் டேனியல் பன்டேன் Mark Daniel Buntain* 🛐 மண்ணில் : 26-01-1923 விண்ணில் : 04-06-1989 ஊர் : வின்னிபெக் நாடு: கனடா தரிசன பூமி : கொல்கத்தா, இந்தியா மார்க் டேனியல் பன்டேன், மனிடோபாவின் வின்னிபெக்கில் உள்ள ஒரு பெந்தேகோஸ்தே சபையில் பணியாற்றிய ஒரு போதகரின் மகன். ஆவிக்குரிய சூழலில் வளர்க்கப்பட்ட பன்டேன் மிஷனரி கதைகளால் ஈர்க்கப்பட்டு, தானும் ஒரு மிஷனரியாக வேண்டும் என்று விரும்பினார். ஒரு வானொலி ஒலிபரப்பாளராக பணிபுரிந்தபோது, கர்த்தரின் ஊழியத்திற்கான அழைப்பை அவர் உணர்ந்தார். ஹுல்தா மன்ரோவை மணந்த பிறகு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு, கனடாவின் சஸ்காட்சுவனில் ஆயராக பணியாற்றினார். மேலும், தைவான், இலங்கை, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு மிஷனரி சுவிசேஷகராகவும் பணியாற்றியுள்ளார். கர்த்தரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்த அவரும் அவரது மனைவியும், 1954 ஆம் ஆண்டில் தங்களது ஒரு வயது மகளுடன் கொல்கத்தா வந்தனர். அங்கே அவர்கள் ஒரு வெற்று இடத்தில் கூடாரத்தை அமைத்து, இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றி மக்களுக்குச் சொல்லத் தொடங்கினர். ஒரு நாள் மார்க் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் கூடாரத்துக்குள் நுழைந்து, “போதகரே, முதலில் எங்கள் வயிற்றுக்கு உணவளித்து, பின்னர் பரலோக கடவுளைப் பற்றி சொல்லுங்கள்” என்றார். மார்க்கு இதயத்தை ஆழமாக தோட்ட அந்த நிகழ்வு, 1964 ஆம் ஆண்டில் "கல்கத்தா மெர்சி" மிஷனை உருவாக்க வழிவகுத்தது. ஏழைகளுக்கு உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த சேவையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் பல ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றிய "அசெம்பிளி ஆஃப் காட் சர்ச் ஸ்கூல்" என்ற பள்ளியை மார்க் நிறுவினார். மேலும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மருத்துவ சேவைகளை வழங்க அவர் ஒரு சிறிய மருத்துவமனையை கட்டினார். பின்னர் இது பல சிறப்பு (மல்டி-ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையாக உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மார்க் கொல்கத்தாவில் உள்ள "அசெம்பிளி ஆஃப் காட்" சபையின் போதகராக பணியாற்றினார். இந்த சபை வட இந்தியாவில் 900 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளின் வளர்ச்சிக்கான மையமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பு மூலம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். மார்க் உடல்நலக்குறைவால் 1989 ஆம் ஆண்டில் மரணமடைந்த போதிலும், அவரது மனைவி ஹூல்தா இந்தியாவிலேயே தங்கி தொடர்ந்து சேவை செய்ய முடிவு செய்தார். அவர்கள் தொடங்கிய சேவைகளை மேற்பார்வையிட்டும் உதவிகள் செய்த்துகொண்டும் அவர் இன்றுவரை தொடர்ந்து கர்த்தரின் சேவையை செய்கிறார். சேவையில் நன்றாக வளர்ந்த ‘கல்கத்தா மெர்சி', இன்று உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் ஏழைகளுக்கு ஆதரவளித்து கொண்டிருக்கின்றது. 🚸 *பிரியமானவர்களே, உங்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு சேவை செய்கிறீர்களா?* 🚸 🛐 *"ஆண்டவரே, மற்றவர்களிடம் கருணை காட்டவும், நீர் என்னை வைத்த இடத்தில் இரக்கமுள்ள இதயத்துடன் சேவை செய்யவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* BenjaminForChrist @ +91 9842513842 நன்றி: Dr. எப்சிபா செல்வம்
❤️ 🙏 6

Comments