Daily One Missionary Biography
Daily One Missionary Biography
January 28, 2025 at 01:45 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *ஜனவரி 28* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *ஜான் கிப்சன் பாட்டன் John Gibson Paton* 🛐 மண்ணில் : 25-04-1824 விண்ணில் : 28-01-1907 ஊர் : கிர்க்மஹோ நாடு: ஸ்காட்லாந்து தரிசன பூமி : நியூ ஹைப்ரடீஸ் தீவுகள் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் கிப்சன் பாட்டன் தென் பசிபிக் கடலில் உள்ள நியூ ஹைப்ரடீஸ் தீவுகளில் மிஷனரியாக பணியாற்றினார். ஒரு பாரிஷ் பள்ளியில் படித்த அவர், தனது 12 வயதிலேயே துணி உற்பத்தி தொழிலைக் கற்றுக்கொண்டார். அவரது தந்தையின் ஜெப வாழ்க்கையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கர்த்தர் தன்னை மிஷனரி ஊழியத்திற்கு அழைக்கிறார் என்பதை உணர்ந்த அவர், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் மருத்துவம் படிக்க சென்றார். பட்டம் பெற்ற பிறகு அவர் துண்டுப்பிரதிங்களை விநியோகிக்கத் தொடங்கினார் மற்றும் கிளாஸ்கோவில் உள்ள ஏழைகளிடையே மிஷனரி சேவையை மேற்கொண்டார். 1858 ஆம் ஆண்டில் ரிஃபார்ம்ட் பிரஸ்பிடிரியன் திருச்சபையால் கரத்தருக்கு சேவை செய்ய தகுதி பெற்ற அவர், ஒரு மிஷனரியாக பணியாற்ற தென் பசிபிக் தீவுகளுக்கு அனுப்பப்பட்டார். அதே ஆண்டில், பாட்டன் அவரது மனைவி மேரி ஆன் ராப்சனுடன் தென் பசிபிக் தீவுகளுக்கு பயணம் செய்தனர். அங்கு அவர்கள் தன்னா தீவில் பணியாற்றத் தொடங்கினர். அந்த தீவின் மக்கள் நரமாமிசம் உண்ணுபவர்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்கள். அங்கு பாட்டனுடைய அனுபவத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லுனுமானால் துயரமாக இருந்தது என சொல்லலாம். அங்கு வந்த சில மாதங்களுக்குள்ளே மலேரியா நோயால் அவர் தனது மனைவியையும் பச்சிளம்குழந்தையான மகனையும் இழந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகில் அவர்களை அடக்கம் செய்து, அவர்களின் உடல்களை நரமாமிசங்களிலிருந்து பாதுகாக்க பல இரவுகள் விழித்திருந்தார். அவ்வளவு சோகம் இருந்தபோதிலும், தன்னை பலமுறை தாக்கிய விரோதமான அந்த உள்ளூர் மக்களிடையே அவர் ஊழியத்தைத் தொடர்ந்தார். அவ்வாறு ஒரு முறை அவர்கள் அவரைத் தாக்கிய போது, சரியான நேரத்தில் அவர் ஒரு மிஷனரி கப்பல் மூலம் மீட்கப்பட்டார். பின்னர் பசிபிக் பகுதிகளில் மிஷனரி பணிக்காக நிதி திரட்டுவதற்கு பாட்டன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார். கிறிஸ்தவ சபைகளில் மிஷனரி சேவைக்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுவதற்காக அவர் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, சவுத் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். 1866 ஆம் ஆண்டில் நியூ ஹைப்ரடீஸ் தீவுகளுக்குத் திரும்பி வந்த பாட்டன், அனிவா தீவில் ஒரு மிஷன் ஸ்தாபனத்தை நிறுவினார். தன்னா தீவுவாசிகளைப் போலவே, இங்குள்ள உள்ளூர்வாசிகளும் நரமாமிசம் உண்ணுபவர்கள், கொடூரமானவர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமானவர்கள். இருப்பினும், பாட்டன் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டு, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வர கடுமையாக உழைத்தார். அவர் புதிய ஏற்பாட்டை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்து, முதல் பாடல் புத்தகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். ஒருபுறம் நோய்கள், மறுபுறம் உள்ளூர் மக்களிடமிருந்து வரும் ஆபத்துகள் இருந்தபோதிலும், பாட்டன் தவறாமல் ஆராதனை கூட்டங்களை நடத்தினார். பல ஆண்டுகள் பொறுமையுடன் செய்த அவரது ஊழியத்தின் விளைவாக அனிவா தீவு முழுவதும் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். 🚸 *பிரியமானவர்களே, உங்கள் சமூகத்தில் மிஷனரி சேவைக்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுவதில் உங்களது பங்கு என்ன?* 🚸 🛐 *"ஆண்டவரே, மற்றவர்களுக்குள்ளே மிஷனரி சேவைக்கான நோக்கத்தையும் உற்சாகத்தையும் வளர்க்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!”* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* BenjaminForChrist @ +91 9842513842 நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏 ❤️ 5

Comments