பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
February 6, 2025 at 03:03 AM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசா பகுதியை கைப்பற்றும் திட்டத்தை வெள்ளை மாளிகை மீளப் பெற்றுள்ளது. ட்ரம்ப், பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து தற்காலிகமாக இடம்பெயர்த்தல் மட்டுமே விரும்பினார் என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, அந்தப் பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி செலுத்தாது என்றும், துருப்புகளை அனுப்புவதற்கும் வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் (Francesca Albanese) 'சட்டவிரோதமானதும், ஒழுக்கமற்றதும், பொறுப்பற்றதுமான' செயல் என விமர்சித்துள்ளார். ஹமாஸ் அமைப்பும், இந்தத் திட்டம் பிராந்தியத்தில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள மக்கள் இதை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
👍 ❤️ 😂 😢 🤲 😏 51

Comments