📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
February 16, 2025 at 09:48 AM
💥மாநில ஆளுநர்கள் : 🌀இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.எனினும் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள் ஆளுநரை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும். 🌀ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது அம்மாநில நிர்வாகத்தை தலைமை செயலாளரின் உதவியுடன் ஆளுநர் கவனித்து கொள்வார். 🌀இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். 💥தகுதிகள் : 🌀இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும். 🌀35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் 🌀மாநில சட்ட மன்றத்திலோ, நாட்டின் பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது. 🌀வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது. 💥இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் பெரும்பாலும் சமமான அதிகாரம் கொண்டவர்களாகவே உள்ளனர் 💥ஆளுநரின் முக்கிய பொறுப்புகள் : 🌀பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது. 🌀முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது. 🌀அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது. 🌀மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது 🌀சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது 🌀சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.) 🌀ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர்(Chancellor) ஆவார். 🔥Important Points 🔹Art : 153 to 162 🔸ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் ( The Ruler ) என்று பொருள் 🔹Art 153 - ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும் 🔸Art 155 - ஆளுநரை நியமிப்பவர் குடியரசு தலைவர் 🔹Art 159 - பதவி பிரமாணம் - மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி 🔸1956 -7 வது சட்ட திருத்தத்தின் படி ஒரு ஆளுநர் ஒன்று or அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக கூடுதல் பதவி வகிக்கலாம் ....

Comments