Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
January 29, 2025 at 01:03 PM
ஊடுருவல்காரர்களின் புகலிடமாகும் தமிழகம்.. திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த 98 வங்கதேச இளைஞர்கள் கைது. வங்கதேசத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவல்காரர்கள் தமிழகத்தில் குடியேறி கொண்டிருப்பதாக இந்துமுன்னணி நெடுங்காலமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, வேலூர் என தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திருப்பூரில் மட்டும் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த 98 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பலர் தமிழகத்தில் கொள்ளையடித்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக திராவிட கட்சிகள் தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்லிக் கொண்டிருப்பதை நிரூபணம் செய்யவும், தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவியுள்ள வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டவரை கைது செய்யவும் அவர்களை கண்காணிக்கவும் தமிழக அரசு காவல்துறையில் தனி ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது... #bangladesh #imigrantes #arrest #tnpolice #hindumunnani
👍 👊 😢 😮 5

Comments