
Hindu Munnani - Tamilnadu
February 1, 2025 at 02:13 AM
இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு அதிகரிக்கும் முதியவர்கள்.
2050 ல் முதியவர்கள் நிறைந்த நாடாக இந்தியா மாறும். ஐ.நா சபை எச்சரிக்கை...
பாரத நாடு 60% இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில ஒரு ஆய்வறிக்கையில் தமிழகத்தில் குழந்தை பிறக்கும் விகிதம் 11% குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
தற்போது ஐநா சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 2050-ல் இந்தியா முதியோர்கள் நிறைந்த நாடாகவும் இந்தியாவில் பெண்கள் கருத்தரிக்கும் தன்மை குறைந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இளைஞர் சக்தி குறைந்துள்ளதால் அந்த நாடுகள் பொருளாதார சரிவை கண்டுள்ளது. மேலும் தங்களின் நாட்டு வளர்ச்சிக்காக இளைஞர் சக்தியை வெளிநாட்டை நம்பியுள்ளது.
தற்போது நமது பாரத நாட்டிலும் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களிடம் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வதை பெருமையாக நினைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் நம் நாட்டில் பாதுகாப்பும், பொருளாதார வளர்ச்சியும், விவசாயம் போன்ற முக்கிய துறைகள் முற்றிலும் பாதிப்படைகின்ற, அபாயகரமான சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.
ஆகவே நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்க்காகவும். எதிர்காலத்தில் பாரத நாடு வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடாகவும் மாற நமது இந்து குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோளை முன்வைக்கிறது..
#india #population #hindupopulation #youthpower #hindumunnani
👍
🙏
❤️
😮
8