Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 1, 2025 at 01:38 PM
ஆர்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி அளிக்கும் காவல்துறை விதிமுறைகளில் திருத்தம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து நியாயமான மக்கள் போராட்டத்திற்கு கூட அனுமதி அளிப்பதில்லை.. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து போராட்டம் செய்பவர்கள் மீது வழக்கு போடுவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. ஆனால் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் கேட்ட மாத்திரத்தில் அனுமதி வழங்குகிறது அந்த வகையில் தமிழக காவல்துறை ஆர்பாட்டம் போராட்டம் நடத்த அனுமதி அளிப்பதில் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது இச்செயலினை இந்து முன்னணி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய 48 மணி நேரத்தில் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான மாநகர காவல்துறை விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது. காவல்துறையின் பாரபட்சமான செயல்களை கண்டித்து, வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பினை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்பதோடு இனியேனும் தமிழக காவல்துறை எவ்வித பாரபட்சமும் இன்றி ஜனநாயக ரீதியாக போராடும் மக்களுக்கு செவி சாய்க்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது... #tnpolice #protestpermission #highcourt #hindumunnani
👍 🙏 ❤️ 11

Comments