
Hindu Munnani - Tamilnadu
February 1, 2025 at 01:42 PM
பாரத தேசத்தை துண்டாட துடிக்கும் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகள்!
எச்சரிக்கை மணி அடிக்கும் மத்திய உளவுத்துறை!!
உர்துஸ்தான், திராவிடஸ்தான், கிறிஸ்துஸ்தான் என பாரத தேசத்தை துண்டாட தூண்டும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு.
இந்தியாவில் 'தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு' (SFJ) என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், சதி திட்டம் தீட்டி தனிநாடு கோரிக்கையைத் தூண்டிவிடுவதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
நாட்டில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகப் போலியான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் உர்துஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் தூண்டி விடுவது.
போதை கும்பலிடமிருந்து விடுவிக்கப்பட்டதால் திட்டமிட்டு உருவாக்கபட்ட, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி கிறிஸ்தவர்களை தூண்டி விடுவது,
தமிழகத்தில் இந்துக்கள் வேறு, தமிழர்கள் வேறு என கூறி திராவிட நாடு கேட்க தூண்டுவது என்பது போன்ற பலவிதமான தேசத்துரோக செயல்களில் SFJ அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் இதற்கான நிதி அமெரிக்கா, கனடா போன்ற வெளி நாடுகளில் இருந்து வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளை வேரும், வேரடி மண்ணுமாக இல்லாது செய்திட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாய் இருந்து பிரிவினைவாத தீய சக்திகளிடமிருந்து தாய் திருநாட்டை காப்போம்...
#khalistanis #sfj #பிரிவினைவாதம் #hindumunnani
👍
🙏
❤️
😡
😮
25