Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 10, 2025 at 12:12 PM
பக்தர்கள் அர்ச்சகர்களுக்கு வழங்கும் தட்சணையை தட்டிப் பறிப்பதா? அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பது இந்துக்களின் வழக்கம்! வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொள்வது அறநிலையத்துறையின் பழக்கம்! மதுரை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் பணத்தை அர்ச்சகர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை உண்டியலில்தான் போட வேண்டுமென எனக் கூறியுள்ளார். இந்த தவறான அறிவிப்பால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு காணிக்கை அளிப்பது இந்துக்களின் மரபுவழி வந்த வழக்கமாகும். பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களுக்கு ஆரத்தி தட்டில் போடும் காணிக்கைதான் வாழ்வாதரமாக உள்ளது. இதை திட்டமிட்டு கெடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பக்தர்களின் பழக்க வழக்கங்களையும், அர்ச்சகர்களின் உரிமையையும் தட்டிப்பறிக்கும் இந்த அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற வேண்டும். கோவில்களின் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் செயல்படும் அறநிலையத்துறையை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது... #temple #madurai #sekarbabu #tnhrce #hindumunnani
👍 😡 😢 4

Comments