
Hindu Munnani - Tamilnadu
February 15, 2025 at 09:11 AM
பாலியல் வன்முறைக்கு
பத்து லட்சம் ரூபாய் விலை பேசும்
விடுதலை சிறுத்தை கட்சி.
தமிழகத்தில் அன்றாடம் பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அதிகரிப்பு!!
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட மாடல் திமுக அரசு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று பேசி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அன்றாடம் பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது .
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் பற்றிய செய்தி அன்றாடம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சேலம் மாவட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
மாணவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் சம்பவத்தை மூடி மறைப்பதற்காக திமுக கூட்டணி கட்சியான விசிகவினர் ரூ 10 லட்சம் பேரம் பேசியதாக புகார் வந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீது நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை உடனடியாக தீர விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துவதோடு, இதுபோல் பேரம் பேசும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது...
#salem #childharrasment #womensafetyfirst #vck #thirumavalavan #cmstalin #hindumunnani
👍
❤️
🔥
😂
🙏
8