Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 15, 2025 at 01:31 PM
வங்கதேசத்து பயங்கரவாதிகளின் புகலிடமாகும் தமிழகம்..? ஓட்டுவங்கி அரசியலுக்காக, பயங்கரவாதிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா..? தமிழக அரசு.. சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.. அசாம் சிறப்பு அதிரடிப்படையும், ஆந்திர காவல்துறையும் இணைந்து சென்னைக்கு அருகே செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலி என்ற இஸ்லாமிய பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். பல்வேறு வங்கதேச பயங்கரவாத இயக்கங்களை தமிழகத்தில் வளர்ப்பது மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்வது, மேலும் அரசு கட்டுமானங்களை வெடிகுண்டு வீசி அழிப்பது போன்ற திட்டத்துடன் பதுங்கியிருந்தவனை தற்போது கைது செய்துள்ளார்கள். ஜமாத் உல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த மொகம்மது மொசுரூதின் என்பவன் கடந்த 2016 முதல் திருப்பூரில் பதுங்கியிருந்து சதிசெயல் திட்டம் தீட்டி வந்துள்ளான். அவனை மேற்கு வங்க காவல்துறை கைது செய்த பிறகு விசாரணையில் தற்போது அபு சலாம் அலியை கைது செய்துள்ளது. ஆனால் தமிழக பயங்கரவாத எதிர்ப்பு படையும் (ATS), தமிழக உளவுதுறையும் என்ன செய்கிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது, தமிழக காவல்துறை ஆழ்ந்த நித்திரையில் உள்ளது, திராவிட மாடல் அரசு ஓட்டுவங்கி அரசியலுக்காக இஸ்லாமிய பயங்கராவாதிகளுக்கு எதிராக கூட எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் அனைத்து உளவு மற்றும் காவல் அமைப்புகளையும் கட்டி போட்டுள்ளது என்றால் மிகையில்லை. சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்து இஸ்லாமியர்கள் குறித்து பலமுறை இந்து முன்னணி பேரியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கூட கண்டுபிடித்து கைது செய்ய முடியாத கையாலாகாத நிலையில்தான் திமுக அரசின் காவல்துறை உள்ளது. சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து ஜாமினில் விடுவித்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் நிலையை மத்திய மாநில அரசுகள் மாற்ற வேண்டும். சட்டவிரோத குடியேறிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுகொள்ள வேண்டும். காலத்துக்கு தக்க சட்டவிதிகளை மாற்ற வேண்டும். தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதை மாநில அரசு உடனடியாக செயல்பட்டு தடுக்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் போர்க்கால அடிப்படையில் கண்டறியபட்டு உடனடியாக நட்டைவிட்டு வெளியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்க எடுக்க வேண்டும்... #illegalmigration #bangladesh #tamilnadunews #cmstalin #hindumunnani
👍 🙏 💪 😂 😮 15

Comments