கதம்பம்
கதம்பம்
February 14, 2025 at 02:38 AM
ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது இந்தியாவில் வழங்கப்படும் ஐந்து வகையான பாதுகாப்புகளில் ஒன்றாகும். இந்த பாதுகாப்பு பொதுவாக அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பிற முக்கிய நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ், ஒரு நபருக்கு 11 பாதுகாப்புப் பணியாளர்கள் வரை ஒதுக்கப்படுவார்கள். இந்த பாதுகாப்புப் பிரிவில் 2 முதல் 3 வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. ஒய் பிரிவு பாதுகாப்பில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசியப் பாதுகாப்புப் படை எனும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 2 முதல் 4 வீரர்கள் (தேவைக்கேற்ப) உள்ளிட்ட 11 காவல்துறையினர் இடம் பெற்றிருக்கின்றனர்.
👍 4

Comments