TV9 Tamil
February 13, 2025 at 02:28 PM
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூர் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த 9ஆம் தேதி பதவி விலகிய நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. புதிய முதல்வர் பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் நேற்று முடிந்தது. இதனால் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.