
TV9 Tamil
4.1K subscribers
Verified ChannelAbout TV9 Tamil
TV9 Tamil Official WhatsApp Channel விரைவாகவும், ஆழமான பார்வையுடனும் செய்திகளை உங்கள் விரல் நுனிக்கு கொண்டு வரும் TamilTV9. Website : https://www.tv9tamilnews.com/
Similar Channels
Swipe to see more
Posts

கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருச்சி விசிக பேரணியில் மாரடைப்பால் உயிரிழந்த கட்சி நிர்வாகி பிரபாகரன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ரூ.2.2 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிப்பு

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (ஜூன் 16) விசாரணை

தவெக தலைவர் விஜயை தங்களது நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு ஜாக்டோ ஜியோ மறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேர் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் சர் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஜூன்16,2025, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் DNA சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல் தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.