
Seithikathir - Tamil News
February 13, 2025 at 01:18 AM
*📌 செய்திக்கதிர்: தலைப்புச் செய்திகள்!*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
• பிரான்ஸில் இருந்து 2 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி! அதிபர் ட்ரம்ப் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
• இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். வாக்கு சதவீதமும் 47-ல் இருந்து 52-ஆக உயர்ந்துள்ளது என இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்.
• புதிய வருமானவரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல். வக்ஃபு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்.
• கோபியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து விட்டு பேசிய செங்கோட்டையன். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்ததாகவும் பேச்சு.
• குழந்தைகள் உள்ளதாலேயே கட்சியில் Children's Wing தொடங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலை.
• சென்னை விமான நிலையப் பகுதியில் நிலவும் கடும் பனி மூட்டம். விமானங்களைப் பாதுகாப்பாக இயக்க இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தல்.
👍
🙏
3