minnalvegakanitham
minnalvegakanitham
January 20, 2025 at 03:40 PM
10) இரண்டு எண்களின் கூடுதல் 36, மேலும் அவற்றுள் ஓர் எண், மற்றோர் எண்ணைவிட 8 அதிகம் எனில் அந்த எண்களில் சிறிய எண் காண்க அ) 14 ஆ) 16 இ) 18 ஈ) 20 11) ஒரு மாணவன் ஒரு தேர்வில் 92% மதிப்பெண்களைப் பெற்றான். அவன் பெற்றது 644 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. அ) 600 ஆ) 700 இ) 750 ஈ) 800 12) ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க. அ) 100 ஆ) 150 இ) 200 ஈ) 300 13) உயர்ம் 5 செ.மீ. இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 8 செ.மீ. மற்றும் 10 செ.மீ. கொண்ட சரிவகத்தின் பரப்பளவு யாது? அ) 18 ச.செ.மீ. ஆ) 40 ச.செ.மீ இ) 45 ச.செ.மீ ஈ) 50 ச.செ.மீ 14) A, B மற்றும் C ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 10 மற்றும் 15 நாட்களில் முடிப்பர். A, B மற்றும் C ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹33000 வழங்கப்படும் எனில் A பெறும் பங்கு எவ்வளவு? அ) ₹18300 ஆ) ₹18200 இ) ₹18100 ஈ) ₹18000 15) இரு கூம்புகளின் கன அளவுகள் 2:9 என்ற விகிதத்தில் இருக்கிறது. முதல் கூம்பின் உயரமானது இரண்டாவது கூம்பின் உயரத்தில் பாதி இருக்கும் பொழுது, அதன் ஆரங்களின் விகிதம் என்ன? அ) 2:9 ஆ) 2:3 இ) √2:6 ஈ) 4:9
❤️ 👍 🫰 5

Comments