BJP Tamil Nadu

41.4K subscribers

Verified Channel
BJP Tamil Nadu
January 25, 2025 at 07:28 AM
மாட்டிக்கினாரு முதல்வரு ! 3 வருடங்களுக்கு முன்பு 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியாச்சு, ஒரு வருடத்திற்கு முன்பு 85% வாக்குறுதிகள் நிறைவேற்றியாச்சு, ஆறு நாட்களுக்கு முன்பு 90% வாக்குறுதிகள் நிறைவேற்றியாச்சு, இரண்டு நாட்களுக்கு முன்பு 502 இல் 389 வாக்குறுதிகள் அதாவது 77% நிறைவேற்றியாச்சு, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கணக்கு தவறாகத் தான் வருகிறது. பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 உடன் ரூ.1500 சேர்த்தால் மொத்தம் ரூ.5000 என்று கணக்கு சொன்ன மாபெரும் கணக்காளரான தமிழக முதல்வர் திரு. @mkstalin, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் துண்டு சீட்டு வைத்திருந்தும் கூட அநியாயமாக வாய் கூசாமல் உளறி மாட்டிக் கொண்டார் ! கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றியுள்ளோம் என்ற அடிப்படைக் கூட அறியாதவரெல்லாம் தமிழகத்தின் முதல்வர் என்பது தான் பெரும் கொடுமை. அதுசரி வாய் வார்த்தைகளால் கூறிய வாக்குறுதிகள் எப்படி நினைவில் இருக்கும்? எதையாவது நிறைவேற்றி இருந்தால் தானே சரியான கணக்கு காண்பிக்க முடியும்?
😂 👍 ❤️ 😡 😢 😮 🙏 🪷 54

Comments