BJP Tamil Nadu

41.4K subscribers

Verified Channel
BJP Tamil Nadu
February 3, 2025 at 09:48 AM
பள்ளி சிறுமியிலிருந்து காவல்துறை அதிகாரி வரை என எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாத திமுக அரசு ! சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேட்டை வெளிப்படுத்திய காரணத்தால், தன்னை உயிருடன் எரிக்க சதி நடந்திருப்பதாக கூடுதல் டிஜிபியே புகார் அளிக்கும் நிலையை தமிழகத்தில் உருவாக்கியதுதான் திராவிட மாடலின் அவலம். சீர்கெட்ட @arivalayam ஆட்சியில் காக்கி அணிந்த பெண்களுக்குகூட பாதுகாப்பு என்பது கடுகளவும் இல்லாத சூழலே நிலவுகிறது. திமுகவின் 'சீரிய'ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால் உயர்பதவிகளில் இருப்போரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென்கிற நிலையே உள்ளது. தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து ஒரு மாணவி புகாரளித்தால் அவரது விபரங்களை வெளியிடுவது, தன் மகளை வன்கொடுமை செய்த கயவர்கள் குறித்து புகார் அளித்த பெற்றோரை அடித்து துன்புறுத்துவது, அரசின் சீரழிவுகளை சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்களின் அலைபேசிகளை வாங்கி அடக்க முயற்சிப்பது என தறிகெட்ட ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தோரின் குரல்வளையை நெரித்து வதைத்து வருகிறது திமுக அரசு. ஒரு சர்வாதிகாரியைப் போல தனது அரசின் தவறுகளை மறைக்க நேர்மையான அதிகாரிகளையும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களையும், அப்பாவி மக்களையும் அச்சுறுத்தும் அரசியல் பாணியை முதல்வர் திரு @mkstalin அவர்கள் கைவிட வேண்டும்! அதே போல தான் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து, கூடுதல் டிஜிபியின் புகாரை உடனடியாக தீர விசாரித்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
👍 😢 😡 🙏 😂 🤦‍♂️ ❤️ 👏 🔥 38

Comments