BJP Tamil Nadu
February 3, 2025 at 01:29 PM
சூரபத்மனை வதம் செய்த குமரனைக் கும்பிடும் நாங்கள், உங்கள் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சுவோமா என்ன?
“உயிர்த் தியாகம் பண்ணிருவோம், ஆட பலி கொடுப்போம் இல்லை ஆளை பலி கொடுப்போம்” என்று பகிரங்கமாக ஒரு கூட்டம் இந்துக்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறது என்றால், தமிழக முதல்வர் திரு. @mkstalin-னின் ஏவல்துறை அந்த பயங்கரவாதிகளைக் கைது செய்யாமல் அவர்களுடன் சமரசம் பேசி சமாதானம் செய்ய முயல்கிறது என்றால் தமிழகத்தில் இந்துக்களின் பாரம்பரிய பெருமையை முழுமையாக அழித்தொழிக்க @arivalayam அரசு எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று தானே பொருள்?
ஒருபுறம் இந்துமதப் பெரியவர்கள் மீது திராவிடச் சாயம் பூச முற்படும் ஸ்டாலின் அரசு, மறுபுறம் இந்துப் பாரம்பரியக் கோவில்களைக் களவாடத் துடிப்பவர்களை ஊக்கப்படுத்துகிறதா? அல்லது திமுகவே ஊதியம் வழங்கி அவர்களை உசுப்பேற்றிவிடுகிறதா? அல்லது எம் பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுள் முதன்மையான திருப்பரங்குன்றத்தை தாரைவார்க்கத் துணிந்துவிட்டாரா தமிழக முதல்வர்?
இவ்வாறு சக மனிதனை வெட்டிப் பலி கொடுப்பேன் என்று கூறுபவர்களைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு, அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை ஒடுக்க 144 தடை உத்தரவு போட்டிருக்கும் பாசிச திமுக அரசின் இந்த இந்துவிரோதப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், ஆண்டாண்டு காலப் பெருமை வாய்ந்த நமது ஆன்மீகக் கலாச்சாரத்தை ஒரு சில உருட்டல் மிரட்டல்களால் அழித்துவிட முடியும் என்ற அறிவாலயத்தின் கனவு சுக்குநூறாக உடையும் வரை ஓங்கி ஒலிக்கட்டும் நமது கந்தனின் பெருமை!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! திருப்பரங்குன்றத்து ஸ்ரீகந்தனுக்கு அரோகரா!
👍
🙏
❤️
😂
😡
🔥
🤡
🪷
41