BJP Tamil Nadu
February 7, 2025 at 03:21 PM
திராவிட மாடல் ஆட்சியின் பாப்பா பாட்டு!
ஓடி வா இங்கே பாப்பா, இனி ஓய்ந்திருந்தால் பயனில்லையடி பாப்பா!
அனைத்தும் அறிந்துகொள்ளடி பாப்பா, இங்கு @arivalayam ஆட்சி நடக்குதடி பாப்பா!
இந்த விளம்பர மாடல் அரசினிலே பாப்பா, பெண்களுக்கு துளி பாதுகாப்பில்லையடி பாப்பா!
தெருவில் நீ விளையாடினாலும் பாப்பா, அங்கே காமப் பேய்கள் உலவுமடி பாப்பா!
நீ பள்ளிக்கு சென்றாலும் பாப்பா, பாலியல் கரங்கள் உன்னைத் தொடருமடி பாப்பா!
கல்லூரியில் நீ படித்தாலும் பாப்பா, பல அறிவாலய “சார்”களுக்கு இரையாக வேண்டுமடி பாப்பா!
பேருந்தில் பயணிக்க முயன்றாலும் பாப்பா, நீ “ஆட்டோ”வில் கடத்தப்படுவாயடி பாப்பா!
உன் குடும்பத்துடன் பயணித்தாலும் பாப்பா, பல “கார்”களும் உன்னைத் துரத்துமடி பாப்பா!
அந்த காமுகன்களை உற்று நோக்கடி பாப்பா, அவர்கள் கழக உடன்பிறப்புகள் தானடி பாப்பா!
நீ போலீஸில் புகாரளித்தாலும் பாப்பா, போக்கத்த ஆட்சியில் எளிதில் நீதி கிடைக்காதடி பாப்பா!
ஆனால் முதல்வரை உதவிக்கு அழைக்காதே பாப்பா, அவர் வெறும் பொம்மைக் கூடு உணர்ந்து கொள்ளடி பாப்பா!
இரும்புக்கரம் ஒன்று உள்ளதடி பாப்பா, அது ஒன்றுக்கும் உதவாதடி பாப்பா!
எனினும் எதிர்த்துப் போராட தயங்காதே பாப்பா, இது அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றான மண்ணடி பாப்பா!
நீதி ஒருநாள் வெல்லுமடி பாப்பா, இந்த அநீதி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோமடி பாப்பா!
@mkstalin @CMOTamilnadu
👍
❤️
👌
👏
😢
🇮🇳
👢
🔥
😀
😂
44