Raj Bhavan, Tamil Nadu
January 23, 2025 at 05:23 AM
பராக்கிரம தினத்தில், தேசிய சுதந்திர போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோரை ஈடுபடுத்த வைத்த ஒரு உயர்ந்த தேசியவாதத் தலைவரும் தொலைநோக்குப் பார்வையாளருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு நாடு நெஞ்மார்ந்த மரியாதை செலுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்பட எண்ணற்ற ஆண்களும் பெண்களும் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) கீழ் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வீரத்துடன் போராடினர். அவரது புரட்சிகர லட்சியங்கள் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தன. இது ஆங்கிலேயர்களை நடுங்கச் செய்ததுடன் இந்தியாவிலிருந்து அவர்கள் வெளியேறுவதையும் நமது தேசிய சுதந்திரத்தை விரைவாகவும் கிடைக்க வைத்தது. நேதாஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் மரபும் நம்பிக்கை நிறைந்த, திறமையான மற்றும் சுயசார்பு, பாரதத்துக்கான தேடலில் ஈடுபட தொடர்ந்து நமது இளைஞர்களைத்தூண்டி வருகின்றன. ஜெய் ஹிந்த்!
🙏
❤️
👍
18