Coimbatore Weatherman
February 3, 2025 at 06:42 AM
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வானிலை அறிக்கை பிப்ரவரி 3 2025:
நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வாரத்திற்கு மழை வாய்ப்புகள் நமது கொங்கு மண்டலத்திற்கு பெரிதாக தென்படவில்லை. பிப்ரவரி மாதத்தில் நம் மக்கள் மழையை எதிர் நோக்க வேண்டாம்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரக்கூடும். இந்த வருடம் மார்ச் ஏப்ரல் ஆகிய காலகட்டங்களில் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மேற்கு கொங்கு மண்டல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
இந்த வருடத்தில் வெப்ப சலன மழை சராசரி அல்லது சராசரிக்கு சற்று அதிகமாக பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து கொங்கு மண்டலத்தில் வெப்ப சலன மழை தொடங்கும். இதனால் வெயிலின் தாக்கம் போன வருடம் அளவுக்கு கொடூரமாக இருக்காது. ஏப்ரல் இரண்டாம் பாதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுப்பெற்று கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பத்தில் பிடியிலிருந்து விலக்கு தரும். மே மாதத்தில் நமது கொங்கு மண்டலத்தில் கனமழை எதிர்பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை நான் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கிறேன். 2025 வறட்சி தரும் வருடமாக இருக்காது. நமது விவசாயிகள் நிம்மதியாக இருக்கலாம்.
©COIMBATORE WEATHERMAN SANTHOSH KRISH WEATHER FORECAST
👍
❤️
🙏
🥳
🆗
👌
💚
82