Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
January 24, 2025 at 02:37 PM
காயல்பட்டினம் இரயில்நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாக இரயிலில் இருந்து ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக நடைமேடையை உயர்த்தியும், நீட்டியும் கட்டித் தர வேண்டுமென ரயில்வேத்துறையின் மேலாளருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன். இந்நிலையில் அதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்துத் தெரிவிக்குமாறு மீண்டும் அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். இதற்குப் பதிலளித்துள்ள இரயில்வே நிர்வாகம், 31.01.2026ஆம் தேதிக்குள் நடைமேடையை உயர்த்தியும், 24 பெட்டிகளுக்கான மேடையாக மேம்படுத்தியும் தருவதாக உறுதி அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
❤️ 👍 🙏 😮 😢 65

Comments