Para
February 3, 2025 at 04:46 AM
படித்தேன் - ரசித்தேன். கலித்தேவன் (கலிய பெருமாள்) நாவல் -இதோ நம் தாய். எழுத்தாளர் - வயலட் ஏவாளின் தேடுதலில் உலகம் ஆரம்பித்ததில் தொடங்கி .புத்தரின் இறுதிக் காலம் அல்லது உடல்நலமில்லா காலத்தில் அகத்திய முனி சந்திப்பதில் ஆரம்பித்து, ஆனந்தர் முழு நிர்வாணம் அடையவில்லை என்பதில் சந்தேகித்து , நிர்வாணமடைந்து செய்யுள்களாக புத்தரின் கருத்துக்களை சொல்வதில் முதல் பகுதியும், 1800 இலங்கையில் இருந்த ஐரோப்பியர் வில்லியம் ரைஸ் டேவிஸ் பாலி மொழியில் புத்தரின் தம்பத ஆவணங்களை கிரந்தங்களிலிருந்து மொழி பெயர்ப்பதில் சங்கடங்கள் உருவாகி மாக்ஸ்முல்லர் முன்பு வெளியிட்டதை தொடர்ந்து வெளியிட முடியாமல் போனதும். இலங்கை நூலகம் எரிந்ததை கனவாக கண்டு வில்லியம் மொழி பெயர்த்த தம்பதம் இலங்கை நூலகத்தில் வைக்கப்பட ,தென்னிந்தியாவை சார்ந்த பொளத்தத்தை ஏற்ற வந்த சித்த வைத்தியருக்கு பரிசாக வழங்கப்பட அது பல தலமுறைகள் கடந்து , சுதந்திர போராட்ட வீரர், காந்தியவாதி கேஎஸ் , தொழிற்சங்க வாதியும், பொளத்த ருமான ஜே.ஜே வை சிறையில் சந்திக்கிகிறார் .கே.ஜே வின் மனைவி மார்க்ரெட் . தம்மபதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர் கிறிஸ்துவில் ஐக்கியமாகிறார். 1930ல் , அவர்களின் நட்பில் தம்மபதத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிலாம் என்று இருவரும் முடிவு செய்கின்றனர். இது முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் ஆனந்தி என்ற பெண்மணி (திருநங்கை ) யை அறிமுகம் செய்கிறார். அவரின் வாழ்க்கை பாதையை, பல வலிகளை ஏமாற்றங்களை கொண்டது . அன்பு செலுத்துவதில் பூனை, நாய் மனிதர்கள் என பேதம் பாராமல் தன்னை அதற்காக தயார் செய்கிறார். இந்து மத ஆன்மீக வாதிகளின் சுயநலத்தை சுட்டி அவர்கள் மேலுள்ள வெறுப்பை பதிவிடுகிறார். புத்தர் கடவுள் இல்லை என்கிறார் என முடித்து கிறிஸ்துவத்தில் மூழ்கி மேரியை தாயாக தன்னையும் உலகின் தாயாக அன்பு செலுத்த தயார் படுத்தும் நிலையை இச்சிறு நாவல் மூலம் வயலட் சொல்ல வருகிறார். முதல் பாகத்தை படிக்கும் போது தோன்றும் ஒரு ஆர்வம் முடிவில் இல்லாது போகிறது. தெளிவில்லாத நடை. இணைக்கும் பாலங்களாக மனிதர்களை காட்டினாலும் விலங்குகளுக்கு பெயரிட்டு அழைக்கும் தருணங்களும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். கதாபாத்திரங்களின் செயல்கள் மனதில் நிற்கவில்லை. இந்நாவல் குறிப்பிடும் நிலைக்கு என்ன பெயர் சொல்வது ........... எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளிக்கிறார்.

Comments