Para
4.0K subscribers
About Para
தமிழ் எழுத்தாளர் பா. ராகவனின் சேனலுக்கு நல்வரவு. தொடர்புக்கு: [email protected]
Similar Channels
Swipe to see more
Posts
https://www.facebook.com/share/r/19GQX6F7Ef/?mibextid=wwXIfr
சனி ஞாயிறுகளில் நான்தான் எழுதுவதில்லை. மொத்தமாக எழுதி முடித்தேவிட்ட உத்தமபுத்திரி பத்மா அர்விந்தின் தொடர் அவசியம் உண்டு. வாசிக்க வருக. madraspaper.com

https://www.facebook.com/reel/3129691867189675 எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! மிக நிச்சயமாக ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும்.
இந்த விடியோவில் பேசியிருக்கும் மூவரும் என் நண்பர்கள். மதுசூதனனை உங்களுக்குத் தெரியும். நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர். தம்புப் படத்தில் உங்கள் வலக்கண்ணுக்கு நேரே இருக்கும் மாரியாத்தா மஞ்சள்சட்டைக்காரர் சற்று நெருக்கமான நண்பரும்கூட. எனவே பார்த்துவிடுங்கள். என்ன ஒன்று, மூவரும் வெட்டி சினிமா அரட்டை அடித்திருக்கிறார்கள். அது பிடித்தவர்களுக்கு இது பிடிக்கும். https://youtu.be/5aCnM-q9otQ?si=zmg9nhSvZYZ7F1n-
குறளும் பொருளும் - 333 333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். பொருள்: தர்மம் செய்து நிலைத்திரு.
முந்நூற்று எண்பது பக்கப் புத்தகம் ஒன்றை நான்கு நாள்களாகப் படித்து, இன்று நிறைவு செய்தேன். ஜின்னாவைப் பற்றிய புத்தகம். முந்நூற்று எண்பது பக்கங்களில் ஓரிடத்தில்கூட பலூசிஸ்தான் என்ற சொல் இல்லை. கலாட் அரசு பற்றிய குறிப்பில்லை. ஜின்னாவை நம்பி நாசமாய்ப் போன மிர் அஹமத்யார் கான் பற்றி ஒன்றுமில்லை. ஜின்னாவை ஒரு தேசியவாதியாகவும் மதச்சார்பின்மையின் காவலராகவும் முன்னிறுத்தும் அரிய வகை ஆராய்ச்சி நூல். என் நேரம். சனி தசையில் சுக்கிர புக்தி கலக்குமானால் இப்படித்தான் ஆகும் போலிருக்கிறது.
கடிதம், சிகரம் பாரதி அன்பின் பாராவுக்கு, தமிழகத்தில் நிலை என்னவென்று தெரியவில்லை. இலங்கையில் வழமை என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தேச வழமைச் சட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள். அது தவிர சில இடங்களில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக வழமைக்கு மாறான, வழமைக்கு திரும்பியது, வழமையாக இடம்பெறும் இவ்வாறான முறையில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டேன். ஆனால் இன்று காலை எனது நண்பர் ஒருவருக்கு நான் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் வழமை என்ற சொல்லை குறிப்பிட்டு விட்டேன். ஆகவே இதைப்பற்றி சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன். நான் பணிபுரியும் செய்தி ஊடகத்தில் வழமை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆகவே எனது தனிப்பட்ட பயன்பாட்டிலும் அந்த சொல் இடம்பெறுவதை தவிர்க்க முடியவில்லை. நண்பருக்கு அனுப்ப தயாராக இருந்த நிலையில், அதை அவதானித்து "இயல்பாக" என்று மாற்றி அனுப்பினேன். பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும் இந்த சொல் பயன்பாட்டில் இருப்பதால் தான் அதன் மாற்றுச் சொல் அல்லது சரியான சொல் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. வழமை என்பதை இயல்பு என்று பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இயல்பு என்பதும் பயன்படுத்த இலகுவான சொல்தான். எனது தனிப்பட்ட பயன்பாட்டில் இயல்பான என்ற சொல்லை பயன்படுத்த முயற்சிக்கிறேன். முயற்சிக்கிறேன் என்று சொல்லக் காரணம், தொழிலில் நான் தீர்மானித்து அதை நீக்கிவிட முடியாது என்பதால் தான். தங்கள் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி ஆசானே. சிகரம் பாரதி. --- இலங்கைத் தமிழில் வழமை உண்டு என்பதைக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேனே. உங்களுக்குத் தள்ளுபடி. நீங்கள் வழமைபோல எழுதுங்கள். பாரா