Para
February 3, 2025 at 04:51 AM
பாமரர் முதல், படித்தோர் வரை அனைவரையும் பாதிக்கும் சைபர் தாக்குதல்களை விவரிக்கும் "கத்தியின்றி இரத்தமின்றி" நூல் மதிப்புரை: பிறர் உடமைகளைப் பரிக்க, மனிதன் காலம்தோறும் பற்பல ஆயுதங்களைையும், எண்ணற்ற தந்திரங்களையும், அவற்றிலிருந்து தன்னைக் காக்கும் மாற்றுவழிகளையும் கண்டறிந்துள்ளான். நாகரீகமடைந்துள்ள தற்போதைய சமூகத்தில், பேராசை, பெருந்தன்மை, அச்சம் உள்ளிட்ட மனித உணர்வுகளையே ஆயுதங்களாக்கும் சைபர் குற்றங்களால் பணம் பரிக்கும் நவீன உக்திகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் எளிய நூலே பேராசிரியர் திரு கே.எஸ். குப்புசாமி எழுதிய "கத்தியின்றி இரத்தமின்றி" நூல். உலகே தம்மை உதாசினப்படுத்துவதாக தவிக்கும் தனித்தீவுகளாகிய தாழ்வுமனப்பா்ண்மையினர், அல்லலுறுபவர்களுக்கு உதவத் துடிக்கும் இறக்க குணத்தார், தொழில்நுட்பத்தால் தன்னம்பிக்கையோடு சுதந்திரமாக இயங்கும் மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் பாதிக்கவல்ல சைபர் க்ரூமிங், டிஜிட்டல் அரெஸ்ட், சிம் ஸ்வாப் முதலிய பல்வகை சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்கும் எளிய வழிவகைகளை வழங்குவதே இந்நூலின் சிறப்பான அம்சமாகும். "துரிதமாக செல்லவேண்டுமெனில் தனித்து செல், வெகுதூரம் செல்லவேண்டுமெனில் கூட்டாக செல்" என்ற ஆஃப்ரிக்க பழமொழிக்கேற்ப, பலரது அனுபவங்கள் வாயிலாக நீண்டகால நோக்கில் பயனளிக்கும் இந்நூலை மெட்ராஸ் பேப்பரில் தொடராகவோ, சீரோ டிகிரி பதிப்பகத்தில் நூலாகவோ வாசித்து விழிப்படையலாம். நட்புடன். இரா. அரவிந்த்.

Comments