Para
February 3, 2025 at 05:58 AM
எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் முன்பு எடிட்டிங் ஒரு பாடமாக இருந்ததே, இப்போது ஏன் இல்லை என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். புதிதாக எழுத வருவோருக்கு 99% அது புரிவதில்லை என்பதே காரணம். எடிட்டிங் என்றால் ப்ரூப் பார்ப்பது, எடிட்டிங் என்றால் வெட்டுவது, எடிட்டிங் என்றால் சுருக்குவது என்று குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு நுட்பத்தினும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது அபாயகரமானது. அந்தப் பழி பாவம் எனக்கு வேண்டாம் என்று அஞ்சித்தான் அந்த வகுப்பை நிறுத்தினேன். மேலே சொன்ன அனைத்துமே எடிட்டிங்கின் அங்கங்கள்தாம். ஆனால் அவை மட்டுமல்ல. இப்போதெல்லாம் எடிட்டிங் வகுப்பு நிச்சயமாக வேண்டும் என்று கேட்போரிடம் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறேன். 1. ஒரு பிழைகூட இல்லாமல் நூறு சொற்களைக் கொண்டு எதையாவது எழுதிக் காட்டுங்கள் (கவிதை கூடாது). 2. நீங்கள் எழுதியதைப் பத்து சொற்களில் திரும்பச் சொல்லுங்கள். இதற்கும் பிறகு யாராவது கேட்பார்கள்? நிற்க. பிப்ரவரி மாத வகுப்புகள் அறிவித்தபடி எட்டாம் தேதி தொடங்குகின்றன. Fiction, Non Fiction, Style, Social Media Writing என்று நான்கு பாடங்கள். மொத்தம் பதினாறு மணி நேர ஆன்லைன் வகுப்பு. தொடர்ச்சியாக நான்கு சனி, ஞாயிறுகளில் இந்திய நேரம் மாலை 7 மணிக்குத் தொடங்கும். வகுப்புக்குப் பிறகு விவாத நேரம் இருக்கும். நுட்பம் அறிந்து எழுத விரும்புவோர் வரலாம். விவரங்களுக்கு எப்போதும் போல வாட்சப். எண் 8610284208.
❤️ 👍 10

Comments